shadow

புரோ கபடி 2018: பாட்னா அணியுடன் டிரா செய்த தமிழ் தலைவாஸ்

கடந்த சில வாரங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் போட்டிகளில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பாட்னா பைரேட்ஸ் அணியுடன் மோதியது

இந்த போட்டி ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இருந்தது மட்டுமின்றி இரு அணிகளும் மாறி மாறி அதிக புள்ளிகளை எடுத்து வந்ததால் வெற்றி யாருக்கு என கணிக்க முடியாத நிலை கடைசி நிமிடம் வரை இருந்தது. கடைசி இரண்டு நிமிடங்களில் கூட இரு அணிகளும் மாறி மாறி தங்கள் அணியின் புள்ளிகளை உயர்த்தியது.

இந்த நிலையில் பரபரப்பான இந்த ஆட்டம் கடைசியில் இரு அணிகளும் தலா 35-35 என்ற புள்ளிகள் போட்டி டிரா ஆனது. இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் தமிழ் தலைவாஸ் அணி ஒரு இடம் முன்னேறி 4வது இடத்திற்கு வந்திருக்கும். ஆனால் தற்போது 30 புள்ளிகளுடன் 5வது இடத்தில் அந்த அணி உள்ளது

 

Leave a Reply