shadow

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி பெற்ற த்ரில் வெற்றி

புரோ கபடி போட்டி தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்ததால் அடுத்த போட்டியில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான நிலையில் நேற்று பெங்கால் அணியுடன் மோதியது.

பெங்கால் அணியும், தமிழ் தலைவாஸ் அணியும் சம பலத்துடன் இருந்ததால் மாறி மாறி புள்ளிகள் அதிகமாகி வந்தது. இந்த நிலையில் கடைசிகட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை விட பெங்கால் அணி இரண்டு புள்ளிகள் அதிகம் இருந்ததால் நேரத்தை கடத்தும் நோக்கில் விளையாடியது

இந்த நிலையில் கடைசி ஐந்து வினாடி மீதியிருக்கும் நிலையில் தமிழ் தலைவாஸ் அணியை விட பெங்கால் அணி 1 புள்ளி அதிகம் இருந்ததால் தமிழ் தலைவாஸ் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது கேப்டன் அஜய்தாகூர் கடைசி ரைடாக சென்றார். ஒரு புள்ளி எடுத்தால் டிரா, இரண்டு புள்ளிகள் எடுத்தால் வெற்றி, புள்ளிகள் எடுக்காமல் வந்தால் தோல்வி என்ற நிலையில் அதிரடியாக இரண்டு புள்ளிகள் எடுத்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார் கேப்டன் அஜய் தாக்கூர் இந்த வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணி 3 வெற்றிகள் பெற்றுள்ளது.

Leave a Reply