புரோ கபடியில் இன்று தமிழ் தலைவாஸ் போட்டி:

நேற்று நடைபெற்ற புரோ கபடி தொடரின் இரண்டு லீக் போட்டிகளில் ஹரியானா மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்ற நிலையில் இன்று தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்கால் அணிகள் மோதவுள்ளன. புள்ளி பட்டியலில் பின்னடைவில் இருக்கும் தமிழ் தலைவாஸ் இன்று வெற்றி பெற்று முன்னணிக்கு வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

இந்த நிலையில் ஹரியானா மற்றும் குஜராத் அணிகள் மோதிய போட்டியில் ஹரியானா அணி 41 புள்ளிகளையும் குஜராத் அணி 25 புள்ளிகளையும் பெற்றதால் 16 புள்ளிகள் வித்தியாசத்தில் ஹரியானா அணி வெற்றி பெற்றது. அதேபோல் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டியில் டெல்லி அணி 40 புள்ளிகளையும் மும்பை அணி 24 புள்ளிகளையும் பெற்றதால் 16 புள்ளிகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வெற்றி பெற்றது

Leave a Reply