புதுவை முன்னாள் முதல்வர் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு புதுவை மற்றும் தமிழக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திமுகவை சேர்ந்த ஜானகிராமன் கடந்த 1996ஆம் ஆண்டு மே 26 முதல் 1999ஆம் ஆண்டு மார்ச் 18 வரை புதுச்சேரி முதல்வராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் புதுவையின் நெல்லித்தோப்பு தொகுதியில் 1985 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 7 முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply