shadow

புதிய 500 ரூபாய் நோட்டு சென்னைக்கு வருவது எப்போது?

1ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து அதற்கு மாற்றாக வந்துவிட்ட்தால் ஓரளவு பிரச்சனையின் தீவிரம் குறைந்துள்ளது. ஆனால் புதிய ரூ.2000 நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டபோதிலும், சில்லரை தட்டுப்பாடு காரணத்தால் பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர். இந்த பிரச்சனைக்கு ரூ.500 புதிய நோட்டு வந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்

வடமாநிலங்களில் புதிய ரூ.500 புழக்கத்திற்கு வந்துவிட்ட்தால் பிரச்சனையின் தீவிரம் வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் தமிழகத்திற்கு இன்னும் ரூ.500 வரவில்லை என்பதால் மக்கள் பெரும் அவதியுறுகின்றனர்.

இந்நிலையில் வரும் 25ஆம் தேதி முதல் சென்னையில் ரூ.500 நோட்டு புழக்கத்திற்கு விடப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனவே வரும் 25ஆம் தேதிக்கு பின்னர் சில்லரை தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply