புதிய தமிழக பாஜக தலைவர் யார்? 8 பேர்களில் இருவருக்கு அதிக வாய்ப்பு
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்திரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து விரைவில் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்படவுள்ளார்.
இந்த பதவிக்கு பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா , சி.பி. ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், ஏ.பி. முருகானந்தம் , வானதி சீனிவாசன், , கே.டி. ராகவன், சீனிவாசம் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
இருப்பினும் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் கே.டி.ராகவன் ஆகிய இருவருக்கு வாய்ப்பு அதிகம் என பாஜக வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் புதிய தலைவர் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.