shadow

பீகார் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி. முலாயம்சிங் யாதவ் கட்சி அறிவிப்பு
bihar
பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணிக்கு தயாராகி வருகின்றன. பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்க லல்லு பிரசாத் யாதவ் மற்றும் நிதீஷ்குமார் கட்சிகள் இணைந்துள்ள நிலையில் இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிகாரில் ஜனதாக் கட்சிகளின் கூட்டணியில் இருந்து முலாயம் சிங் யாதவ் அவர்களின் சமாஜவாதி கட்சி விலகுவதாகவும், சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சிக்கு, தொகுதிப் பங்கீட்டில் வெறும் ஐந்து இடங்கள் மட்டுமே ஒதுக்கியதே கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கான காரணம் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜவாதி ஆகிய கட்சிகள் இணைந்து பாஜகவுக்கு எதிராக பிகாரில் வலுவான கூட்டணி அமைத்தன. கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதீஷ் குமார் முன்னிறுத்தப்பட்டார். இந்த நிலையில், வெறும் 4 அல்லது 5 இடங்கள் மட்டுமே சமாஜவாதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

Leave a Reply