பிளாஸ்டிக் குப்பை கொண்டு வந்தால் சாப்பாடு: உணவகத்தின் அசத்தல் சலுகை

சத்தீஷ்கரில் பிளாஸ்டிக் குப்பைகளை கொண்டுவருபவர்களுக்கு உணவு வழங்கும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

குப்பைகளை அகற்ற அம்பிகாபூர் மாநகராட்சி சார்பில் கார்பேஜ் கஃபே திறக்கப்படுகிறது. அங்கு ஒருகிலோ பிளாஸ்டிக் குப்பையைக் கொண்டுவரும் குடிமக்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என அறிவிக்கவிருப்பதாக மேயர்அஜய் டிக்ரே கூறியுள்ளார்.

இதன் மூலம் நகரம் தூய்மையாகி குப்பையற்று இருக்கும் என்றும், சுற்றுச் சூழலுக்கு கேடு விளைக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் மறுசுழற்சிக்குப் பயன்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply