shadow

பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் நிக்கி கல்ராணி

ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த ‘டார்லிங்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நிக்கிகல்ராணி அதன் பின்னர் தொடர்ச்சியாக வெற்றி படங்களில் நடித்து நம்பர் ஒன் இடத்தை நோக்கி முன்னேறி செல்கிறார். சமீபத்தில் இவர் நடித்த ‘ஹரஹர மகாதேவகி’ சூப்பர் ஹிட் ஆகியது.

இந்த நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘சார்லி சாப்ளின்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய சக்தி சிதம்பரம் இயக்கவுள்ளார். கிரேசி மோகன் வசனம் எழுதுகிறார்.

மேலும் இந்த படத்தில் ‘கருப்பன்’ புகழ் தான்யாவும் இன்னொரு நாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் முதல் பாகத்தில் நடித்த பிரபு, காயத்ரி ரகுராம் ஆகியோர்களும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply