shadow

பிரபாகரன் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார். இலங்கை அமைச்சரின் பரபரப்பு பேச்சு

prabhakaran birthdayகடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற சிங்கள ராணுவத்திற்கு எதிரான இறுதிப்போரில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசே அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால் பிரபாகரனும் அவருடைய குடும்பத்தின் சிலரும் வெளிநாட்டில் வாழ்ந்து வருவதாக பல தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பிரபாகரன் உயிரிழக்கவில்லை என்றும் அவர் இன்னும் உயிருடன்தான் இருப்பதாகவும் இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் விக்கிரம சிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த இவர் சிங்கள வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

‘இலங்கை இறுதிகட்ட போரில் பிரபாகரன் உயிரிழந்தாக கூறப்படுவதை நம்பமுடியவில்லை. எத்தனையோ பேருக்கு மரண சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பிரபாகரன் இறந்து விட்டதாக மரண சான்றிதழ் வழங்கவில்லை. எனவே, மரண சான்றிதழ் கொடுத்தால் தான் அவர் இறந்து விட்டதாக என்னால் நம்ப முடியும் என்று கூறினார்.

விஜயகலா மகேஸ்வரனின் இந்த கருத்து இலங்கையில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. ஆனால் அமைச்சரின் கருத்தை யாரும் பொருட்படுத்த வேண்டாம் என்று இலங்கை பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியா ராச்சி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply