shadow

பிரபல நடிகரின் மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல்

ரஜினியின் நெருங்கிய நண்பரும், கன்னட திரையுலகின் பிரபல நடிகருமான அம்ரீஷ் உடல்நலக்குறைவால் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66

திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை உடனடியாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் அம்பரீஷின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அம்பரீஷ் மரணம் அடைந்துள்ளார். அம்ரிஷ் மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply