பிரபல இயக்குனரின் 25 வயது மகன் திடீர் மரணம்: இரங்கல் தெரிவித்த அஜித்!

அஜித், சிம்ரன் நடித்த ’அவள் வருவாளா’, ’ஆனந்த பூங்காற்றே’ உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கி இயக்குனர் ராஜ்கபூர். இவர் பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர நடிகராகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இயக்குனர் ராஜ்கபூரின் 25 வயது மகன் ஷாருக், சமீபத்தில் மெக்கா சென்று இருந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மெக்காவில் திடீரென மரணம் அடைந்துவிட்டார். அவரது மறைவால் இயக்குனர் ராஜ்குமார் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்

ராஜ்கபூர் மகன் மரணம் அடைந்த செய்தி கேட்ட அஜித், அவரிடம் துக்கம் விசாரித்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply