shadow

பிரதமர் மோடி அழைப்பை ஏற்று இந்தியா வரும் தென்கொரிய அதிபர்

தென்கொரிய நாட்டின்அதிபர் மூன் ஜே அவர்கள் வரும் ஜூலை மாதம் 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின்போது அவர் இந்திய பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளார்.

இதுகுறித்து தென்கொரிய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அதிபர் மூன் ஜே இந்தியா வரவுள்ளார். இந்தியாவுக்கு முதல்முறையாக வருகைதரும் மூன் ஜே, அவர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்பில் இருநாட்டு பொருளாதார உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்

இந்தியாவைத் தொடர்ந்து மூன் ஜே சிங்கப்பூர் செல்ல இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply