shadow

பிரதமர் மோடியின் கனவை நனவாக்கும் கூகுளின் புதிய செயலி

பாரத பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் பதவியை ஏற்றதில் இருந்தே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் பொதுமக்கள் பெருமளவு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறியுள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையின் தேவையை புரிந்து கொண்ட கூகுள் நிறுவனம் தற்போது தேஸ் (TEX) என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. ‘வேகம்’ என்ற பொருள் கொண்ட இந்த செயலி பெயருக்கேற்றாற்போல் வேகமாக பணப்பரிமாற்றம் செய்ய உதவுகிறது

‘தேஸ்’ மனித செவிக்குப் புலப்படாமல் இருக்கும் அல்ட்ராசோனிக் அதிர்வெண்களைப் பயன்படுத்தி, இரு சாதனங்களுக்கு இடையே ஓர் இணைப்பை உருவாக்குகிறது. இதன் விளைவாக, வங்கிக் கணக்கு தகவல்கள் அல்லது தொலைபேசி எண்ணையும் பகிர்ந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை. இந்தச் சேவை, தேஸ் ஷீல்டால் (Tez Shield) பாதுகாக்கப்படுகிறது. இது,மோசடியான பயன்பாட்டைக் கண்டறிந்து, பயனர் அடையாளங்களைக் காக்கிறது.

Leave a Reply