shadow

பிரதமர் அதிகாரத்தில் ஜனாதிபதி தலையிட்டால் மோடி ஏற்பாரா? நாராயணசாமி

இதுவரை டெல்லி, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் துணை நிலை ஆளுனர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர்களுக்கு பிரச்சனைகள் கொடுத்து வந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் ஆளுனரின் அதிகாரம் அதிகரித்துள்ளது.

முதல்வர், அமைச்சர்களுக்கு தெரியாமல் திடீரென ஆளுனர் பன்வாரிலால் ஆய்வு செய்து கொண்டிருப்பது எதிர்க்கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக மத்திய அரசின் கைப்பாவையாக இயங்கும் தமிழக அரசு இந்த ஆய்வு குறித்து கண்டுகொண்டதாக தெரியவில்லை

இந்த நிலையில் புதுவை முதல்வர் நாராயணசாமி இதுகுறித்து இன்று கருத்து தெரிவித்தபோது, ‘பிரதமரின் அதிகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட்டால் மோடி ஏற்றுக்கொள்வாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். தங்களின் ஆட்சி இல்லாத மாநில அரசின் உரிமைகளில் மத்திய பாஜக தலையிடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்

Leave a Reply