பின்னுக்கு தள்ளப்பட்ட தீபாவளி நிகழ்ச்சிகள்: நேரடி ஒளிபரப்பில் ஆழ்துளை கிணறு விவகாரம்

தீபாவளி என்றாலே சிறப்பு நிகழ்ச்சிகளும் புதிய திரைப்படங்களும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் போது அதனை கண்கொட்டாமல் பார்க்கும் பொதுமக்கள் ஏராளமாக இருப்பார்கள்

காலை முதல் இரவு வரை தீபாவளி கொண்டாடுவதை கூட மறந்து விட்டு தொலைக்காட்சியே கதி என்று அதன் முன் உட்கார்ந்து நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்து கொண்டிருப்பார்கள்

இந்த நிலையில் இன்றும் தீபாவளியை ஒட்டி பல முன்னணி தொலைக்காட்சிகள் பிரபலமான நிகழ்ச்சிகளையும் புதிய திரைப்படங்களையும் ஒளிபரப்பி வருகின்றனர்

ஆனால் பொதுமக்கள் அந்த நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டாமல் இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்படும் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்திகளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்

பொதுமக்களும் தற்போது விழிப்புணர்வு அடைந்து இனிமேல் ஆழ்துளைகிணறுகளை மூடாமல் வைக்க கூடாது என்று பலரும் பேட்டி அளித்து வருகின்றனர்

தீபாவளி நிகழ்ச்சியை புறந்தள்ளிவிட்டு பொதுமக்கள் செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதை அடுத்து தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருகிறது என்பதை உறுதி செய்கின்றன

Leave a Reply