பிக்பாஸ் வீட்டில் இருந்து தர்ஷன் வெளியேற்றம்: மக்கள் முடிவா? பிக்பாஸ் முடிவா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஷெரின் கடந்த வாரமே வெளியேற்றப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென ஷெரின் காப்பாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்

இதனையடுத்து இந்த வாரம் அவர் வெளியேறுவது உறுதி என்றே பார்வையாளர்கள் நம்பி இருந்தனர். ஆனால் திடீர் திருப்பமாக இன்று தர்ஷன் வெளியேறிவிட்டதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இந்த முடிவு மக்களால் எடுக்கப்பட்டது என்று கமலஹாசன் கூறினாலும் இது மக்களால் எடுக்கப்பட்டதா? அல்லது பிக்பாஸ் எடுத்த முடிவா? என்ற சந்தேகத்தை சமூக வலைதள பயனாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வாய்ப்பே இல்லை என்றும் டைட்டிலை வெற்றி பெறக் கூடிய அளவுக்கு அவர் தகுதி உடையவர் என்றும் அனைவரும் கருத்து கூறி வருகின்றனர்

Leave a Reply