பிக்பாஸ் வதந்தியை நம்ப வேண்டாம்: தமிழ் நடிகர் வெளியிட்ட வீடியோ

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரமோ படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. இதில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் கலந்து கொண்டார்

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து ஒருசில வதந்திகள் பரவி வருகிறது. அவ்வாறு பரவி வரும் வதந்திகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ரமேஷ் திலக் கலந்து கொள்ள உள்ளார் என்பதுதான்.

ஆனால் இந்த வதந்தியை நடிகர் ரமேஷ் திலக் மறுத்துள்ளார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளவில்லை என்றும் இந்த வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.

Leave a Reply