பிக்கப்புக்கு கார், அன்லிமிடெட் ஸ்நாக்ஸ்: உலகில் முதல்முறையாக சென்னையில் ஒரு தியேட்டர்

உலகில் எங்குமே இல்லாத புதுமையான தியேட்டரை சென்னையில் கொண்டு வரப்போவதாக சென்னை அபிராமி திரையரங்க வளாக உரிமையாளர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

இதன்படி படம் பார்க்க டிக்கெட் முன்பதிவு செய்தால் அவர்கள் வீட்டுக்கே பிக்கப்புக்கு கார் வரும். அதேபோல் படம் முடிந்தவுடன் வீட்டில் டிராப் செய்யப்படுவார்கள். இடைவேளையின்போது பாப்கார்ன் போன்ற ஸ்நாக்ஸ்கள் அன்லிமிடெட். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம். தியேட்டரின் கொள்ளளவு 200 சீட்டுக்கள் இருந்தாலும் 60 சீட்டுக்கள் மட்டுமே போடப்பட்டிருக்கும். ஒவ்வொரு 8 சீட்டுக்கும் ஒரு வெயிட்டர் இருப்பார், தேவையானதை மெனுவில் ஆர்டர் செய்தால் அடுத்த சிலநிமிடங்களில் டெலிவரி செய்யப்படும்.

அதேபோல் பிறந்த நாள் திருமண பார்ட்டி என்றால் 60 சீட்டுக்களையும் புக் செய்தால், பொஃபே உணவு வழங்கப்படும். அந்த தியேட்டரில் அவர்கள் விரும்பும் எந்த படமாக இருந்தாலும் திரையிடப்படும். இப்படி ஒரு தியேட்டர் சென்னையில் கட்டிக்கொண்டிருப்பதாலும் இந்த தியேட்டர் திறக்கப்பட்டால் உலகிலேயே இதுதான் முதல்முறை என்றும் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply