’பிகில்’ மற்றும் ‘கைதி’ ஒரே தேதியில் ரிலீஸா?

விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் அதாவது அக்டோபர் 25-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முன்னதாக பிகில் திரைப்படம் அக்டோபர் 25ம் தேதியும் கைதி திரைப்படம் அக்டோபர் 27ஆம் தேதியும் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் கூறின. ஆனால் தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின்படி இரண்டு படங்களும் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு கைதி திரைப் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் அறிவிக்க உள்ளதாக தெரிகிறது\\

Leave a Reply