‘பிகில்’ படத்திற்கு எதிராக தமிழக அரசு நோட்டீஸ்: ஆப்பு ஆரம்பமாகிவிட்டதா?

பொதுவாக விஜய் நடித்த திரைப்படம் என்றால் அந்த திரைப்படத்தின் வெளியீட்டின் போதோ அல்லது வெளியிட்ட பின்னர் தான் பிரச்சனைகள் வரும். ஆனால் தற்போது பிகில் படத்திற்கு இசை வெளியீட்டு விழாவின் போதே பிரச்சினை வந்து விட்டது

‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய ஒரு சில கருத்துக்கள் பெரும் சர்ச்சை ஆகியுள்ள நிலையில் தற்போது தமிழக அரசு இதில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இடம் கொடுத்த தனியார் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது

இதில் ‘பிகில்’ திரைப்பட விழாவிற்கு எதன் அடிப்படையில் கல்லூரி அனுமதி கொடுத்தது என்றும், ‘பிகில்’ ஆடியோ விழாவிற்கு அனுமதி கொடுத்தது ஏன் என்றும் விளக்கம் தர தாம்பரம் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்திற்கு உயர் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது இதனால் கல்லூரி நிர்வாகத்தின் இடையே கல்லூரி நிர்வாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply