’பிகில்’ எந்த படத்தில் இருந்து திருடியது: கண்டுபிடித்த நெட்டிசன்கள்

இயக்குனர் அட்லி இயக்கும் திரைப்படம் ஒன்று வெளியாகிறது என்றால் அந்தப் படம் எப்படி உள்ளது என்று கெட்டவர்களை விட, இந்த படம் எந்த படத்தில் இருந்து காப்பி அடித்தது? என்று கேட்பவர்களே அதிகம்

அட்லியின் முதல் படமான ராஜா ராணி திரைப்படம் மணிரத்னம் இயக்கிய மௌனராகம் படத்தின் காப்பி என்பது தெரிந்ததே

அதே போல் அவர் இயக்கிய இரண்டாவது படமான தெறி திரைப்படம் விஜயகாந்த் நடித்த சத்ரியன் படத்தின் காப்பி என்று கூறப்பட்டது

மேலும் மூன்றாவது படமான மெர்சல் திரைப்படம் அபூர்வ சகோதர்கள் படத்தின் காப்பி என்பது அனைவருக்கும் தெரிந்ததே

இந்த நிலையில் பிகில் திரைப்படம் எந்த படத்தின் காப்பி என்பதை சற்று முன் நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர்

இந்த படத்தின் கதை கிட்டத்தட்ட ஜென்டில்மேன் படத்தின் கதை போலவே உள்ளதாகவும் கால்பந்து அணியில் சேர்க்கப்படாத கதிர் தற்கொலை செய்துகொள்ள அதற்காக விஸ்வரூபம் எடுத்து விஜய் நடத்தும் அதிரடி தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இதுவரை மற்ற இயக்குனர்களின் படங்களை காப்பி அடித்து அட்லி, தற்போது தனது குருநாதர் சங்கர் படத்தின் மீது கை வைத்து விட்டதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

 

 

Leave a Reply