shadow

பிஏசிஎல் வங்கி கணக்கை முடக்கியது `செபி’

paclசிறு முதலீட்டாளர்களிடம் முறை கேடாக திரட்டிய 55,000 கோடி ரூபாய் பணத்தை பிஏசிஎல் நிறு வனத்திடமிருந்து மீட்க பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (செபி) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிஏசிஎல் நிறுவனத்தின் வங்கி கணக்குகள், டீமேட் மற்றும் மியூச்சுவல் பண்ட் கணக்குகளை முடக்க `செபி’ உத்தரவிட்டிருக்கிறது. பிஏசிஎல் குழுமத்தின் 640 கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

பிஏசிஎல் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு, பாதுகாப்புப் பெட்டகம், டீமேட் மற்றும் மியூச்சுவல் பண்ட் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கக்கூடாது என்று பல்வேறு வங்கிகளிடம் `செபி’ கேட்டுக் கொண்டுள்ளது. பிஏசிஎல் குழுமம் பணப் பரி மாற்றத்தில் ஈடுபடுவதாக தகவல் வந்ததை அடுத்து இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. மேலும் பிஏசிஎல் குழுமத்தின் கடன் கணக்குகள் பற்றிய விவரங்களை யும் வங்கிகளிடம் `செபி’ கேட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஒரு வருடத்துக்குரிய பரிவர்த்தனை விவரங்களை கேட்டுள்ளது.

தவிர, பிஏசில் நிறுவனங்களின் கணக்குகள் முடக்கப்பட்டுவிட்டது என்ற தகவலை வங்கிகள், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. முதலீட்டாளர்கள் பணத்தை பாதுகாக்கும் நோக்கில் செபி இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜெய்ப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கிய பிஏசிஎல் நிறுவனம் வேளாண்மை மற்றும் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் மக்களிடம் பணத்தை திரட்டியது. இந்த பணம் முறைகேடாக திரட்டப்பட்டது என்று `செபி’ கண்டறிந்தது.

உச்சநீதிமன்ற உத்தரவின் படி, பிஏசிஎல் சொத்துகளை விற்று முதலீட்டாளர்களின் பணத்தை திரும்ப வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கு ஒரு உயர் நிலைக் குழுவை `செபி’ நியமித்தது. இந்த உயர்நிலைக் குழுவுக்கு முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமை வகித்தார். பிஏசிஎல் நிறுவனத்தின் சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

192 மாவட்டங்களில் பிஏசிஎல் நிறுவனத்திற்கு சொந்தமான ரியல் எஸ்டேட் சொத்து களை ‘செபி’ முடக்கியது. மேலும் கடந்த மாதம் பிஏசிஎல் நிறு வனத்தின் வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டன. முதலீட்டாளர் களுக்கு திருப்பி அளிக்கவேண் டிய 55,000 கோடி ரூபாயை வழங்காததால் பிஏசிஎல் நிறுவனத்தின் சொத்துகளை `செபி’ பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply