shadow

பாலா-விக்னேஷ் சிவன்: விக்ரம் மகன் படத்தை இயக்க போவது யார்?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய விக்ரம் மகன் துருவ் தமிழ்திரையுலகில் அர்ஜூன் ரெட்டி ரீமேக் படத்தில் அறிமுகமாகவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தை பிரபல நிறுவனம் ஒன்று தயாரிக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் இயக்குனர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

விக்ரமுக்கு திருப்புமுனை கொடுத்த பாலா இயக்க வாய்ப்பு இருப்பதாகவும், அவருக்கு அடுத்தபடியாக விக்னேஷ் சிவன் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

தற்போது துருவ் குறும்படம் ஒன்றுக்காக வெளிநாட்டில் உள்ளார். இந்த படத்தின் பணிகள் மற்றும் அவருடைய சகோதரி திருமணம் ஆகியவை முடிந்த பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது

 

Leave a Reply