shadow

பாலா படத்தில் குத்தாட்டம் போடும் பிக்பாஸ் புகழ் ரைசா

பிரபல இயக்குனர் பாலா தற்போது ‘வர்மா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கில் வெற்றி பெற்ற ‘அர்ஜூன்ரெட்டி’ படத்தின் ரீமேக் படமான இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் நாயகனாகவும், கொல்கத்தாவை சேர்ந்த மேகா சௌத்ரி நாயகியாகவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட பிக்பாஸ் புகழ் ரைசா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த பாடல் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் இந்த ஒரு பாடலுக்காக ரைசாவுக்கு ஒரு கணிசமான தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது

ரைசா தற்போது ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக ’பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. யுவன் சங்கர் ராஜா தயாரித்து வரும் இப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.

Leave a Reply