பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றம் அதிரடி

பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கு ஒன்றில் முன்னாள் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதனால் பாலகிருஷ்ண ரெட்டியின் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவி பறிபோய் அவரது தொகுதியான ஒசூர் காலியானதாக அறிவிக்கப்பட்டு தற்போது தேர்தலும் நடைபெறவுள்ளது

இந்த நிலையில் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பாலகிருஷ்ண ரெட்டி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடியும் வரை அவர் சிறைக்கு செல்ல வேண்டியதில்லை என்பதும் தொடர்ந்து அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply