தனிமனித இடைவெளி காற்றில் பறந்ததால் பரபரப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு நாளை முதல் விதிக்கப்பட்டுள்ளது. மே 17 வரை இந்த ஊரடங்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த ஊரடங்கின்போது தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்றும் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் குஜராத்தில் உள்ள ரமேஷ் என்பவர் தனது புகையிலை கடையை நேற்று திறந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக பான்பீடா உள்ளிட்ட புகையிலையை சுவைக்காமல் இருந்த பொதுமக்கள் பான்பீடா கடை திறந்தவுடன் வேக வேகமாக வந்து அவரிடம் புகையிலையையும் பான்பீடாவையும் வாங்க தொடங்கினர் இதனால் தனிமனித இடைவெளி என்பது காற்றில் பறக்கவிடப்பட்டு ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு புகையிலையை வாங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து அங்கு உடனடியாக வந்த காவல்துறையினர் பான் பீடா கடைக்காரர் மீது வழக்குப் பதிவு செய்ததோடு அந்த கடையில் இருந்த சுமார் 12000 ரூபாய் மதிப்புள்ள புகை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கொரோனா வைரஸ் குறித்த எந்தவித பயமுமின்றி புகையிலை வாங்க பொது மக்கள் முண்டியடித்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply