shadow

பாடகராக மாறிய பிக்பாஸ் புகழ் ஆரவ்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பலர் திரைத்துறையில் வாய்ப்புகள் பெற்று வரும் நிலையில் பிக்பாஸ் முதல் சீசனின் வின்னர் ஆரவ் ஹீரோவாக நடித்து வரும் படம் ‘ராஜபீமா’. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஆரவ் ஒரு பாடலை பாடியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

அறிமுக இசையமைப்பாளர் சைமன் இசையில் ஆரவ் பாடிய இந்த பாடல், படத்தில் வரும் முக்கிய பாடல் என்றும், சமீபத்தில் இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டவுடன் இந்த பாடலை பாடிய ஆரவ்வை படக்குழுவினர் பாராட்டியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆரவ்வுடன் ஓவியா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் நரேஷ் சம்பத் இயக்கி வருகிறார். எஸ்.மோகன் தயாரித்து வரும் இந்த படம் ஒரு மிருக முரண்பாடுகளை பற்றி உருவாக்கப்பட்ட கதையம்சம் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply