பாடகராக அறிமுகமாகும் ஸ்டேண்ட் அப் காமெடியன்

தொலைக்காட்சிகளில் பிரபலமாக இருப்பவர்கள் திரைத்துறையில் நுழைவது கடந்த சில ஆண்டுகளாக அதிகமாகி வருகிறது. சிவகார்த்திகேயன், சந்தானம் உள்பட பலர் தொலைக்காட்சிகள் பிரபலமானவர்கள் தான் என்பதும் அவர்கள் தற்போது திரையுலகில் முன்னணி இடத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான கன்னிமாடம் என்ற திரைப்படத்தில் தொலைக்காட்சி பிரபலமும் நகைச்சுவை நடிகருமான ரோபோ சங்கர் ஒரு பாடலை பாடி பாடகராக மாறினார் என்பது தெரிந்ததே. இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து தற்போது தொலைக்காட்சிகளில் ஸ்டேண்ட் அப் காமெடி செய்து வரும் அலெக்ஸ் ஒரு பாடலை பாடியுள்ளார். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகிவரும் ’தாராளப் பிரபு’ என்ற படத்தில்தான் இவர் ஒரு பாடலை பாடி உள்ளார் என்றும் இந்த பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அலெக்ஸ் பாடிய பாடல் நல்ல வரவேற்பை பெற்றால் தொடர்ச்சியாக அவர் மேலும் பல பாடல்களைப் பாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply