பாஜக வேட்பாளரான அஜித் அண்ணன் நடிகர்!

அஜித் படத்தில் அவருக்கு அண்ணனாக நடித்தவரை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘தீனா’ படத்தில் அஜித் அண்ணனாக நடித்த பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் ஷங்கர் இயக்கிய ‘ஐ’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

கேரளாவில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை எனினும் திருச்சூரில் பாஜக நட்சத்திர வேட்பாளரை நிறுத்தியுள்ளதால் அவர் வெற்றியை நெருங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதல் நாளே நடிகர் சுரேஷ் கோபி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply