பாஜக தேர்தல் அறிக்கை: வட்டியில்லாமல் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கடன்!

டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் 48 பக்கங்கள் கொண்ட பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட இந்த தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

* ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்!

* அனைத்து மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்து GST நடைமுறைகள் மேலும் எளிதாக்கப்படும்

* 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு!

* வாஜ்பாய் கனவை நனவாக்கும் வகையில் நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்

* சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கைகள், சடங்குகளை உச்சநீதிமன்றம் முன் எடுத்துரைத்து, அவற்றை பாதுகாப்போம்

* ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை நடத்த உரிய நடவடிக்கை

* அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனைத்து வகையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்

* நாடு முழுவதும் 60000 கிமீ நீளத்திற்கு புதிய நெடுஞ்சாலைகள்

* ரூ.25 லட்சம் கோடியில் கிராமப்புற வளர்ச்சிக்கு திட்ட

* பொருளாதாரத்தை உயர்த்த உறுதி

* 60 வயதான சிறு, குறு விவசாயிகளுக்கு ஒய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

* விவசாயிகளுக்கு பென்ஷன் திட்டம். வட்டி இல்லாமல் ரூ.1 லட்சம் வரை குறுகிய கால விவசாய கடன்

* அரசியலமைப்பு சட்டத் திருத்தம் மூலம் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு

* மத்திய பல்கலையில் அடுத்த 5 ஆண்டுகளில் 50% இடங்கள் அதிகரிக்கப்படும்

* நாடு முழுவதும் 50 உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும்

* கருப்பு பணம் மற்றும் பினாமி சொத்துகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் தொடரும்

▪️ கல்வி சுகாதாரம் அனைவருக்கும் வழங்க திட்டங்கள்

▪️ தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

▪ ️விவசாயிகள் வணிகர்களுக்கு ஓய்வூதியம்

* முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும்

*நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் உருவாக்கப்படும்

*2024க்குள் வீடுகள் அனைத்திற்கும் குழாய் தண்ணீர் இணைப்பு வழங்கப்படும்

* ஆதார் உடன் எல்லா நிலப்பத்திரங்களும் இணைக்கப்பட்டு கணினி மயமாக்கப்படும்

* எல்லோருக்கும் வீடு, குடிநீர், இணைய, சாலை இணைப்பு வசதி எல்லோருக்கும் வரி குறைக்கப்படும்

* வியாபாரிகளுக்கு தேசிய வியாபாரிகள் நலச்சங்கம் அமைக்கப்படும். வியாபாரிகளுக்கு பத்து லட்சம் காப்பீடு

Leave a Reply