தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக திரையுலக பிரமுகர்கள் பலர் பிரச்சாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பாலிவுட் நடிகர் அனில் கபூர் அக்ஷய்குமார் அஜய்தேவ்கான் உள்ளிட்டோர் மேற்குவங்கம் அசாம் கேரளா ஆகிய மாநிலங்களில் பிரச்சாரம் செய்வார்கள் என்று தெரிகிறது

அதேபோல் சென்னை உள்பட தமிழகத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஹேமாமாலினி மற்றும் ஒரு சில நடிகைகள் பிரச்சாரம் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் நான்கு நாட்கள் தமிழிலேயே பிரச்சாரம் செய்ய ஹேமமாலினி முடிவு செய்து செய்திருப்பதாகவும் அவர் பாஜகவிற்கு பிரச்சாரம் செய்யும் இடங்களை விரைவில் தேர்வு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த திரையுலக பிரபலங்கள் பலரும் பாஜக பிரச்சாரம் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply