பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ

ஒவ்வொரு தேர்தலின்போது ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவி வருபவர்கள் அதிகமாகி வருகிறது. இந்த மக்களவை தேர்தலின்போது பலர் கட்சி தாவி புதியதாக இணைந்த கட்சியில் சீட் பெற்று வருவதை பல முறை பார்த்தோம்

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ ஒருவர் திடீரென பாஜகவில் இணைந்துள்ளது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி காந்திநகர் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அனில் பாஜ்பாய், மத்திய அமைச்சர் விஜய் கோயல் முன்னிலையில் இன்று பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். இதனால் ஆம் ஆத்மி தரப்பு அதிர்ச்சியில் உள்ளது

Leave a Reply