shadow

பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமாவில் 44 சி.ஆர்.பி.எப் வீர்ர்கள் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பினால் பலியகியுள்ள நிலையில் இந்த தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி வருகிறது. இதன் முதல் கட்டமாக புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு முதல் பதிலடியாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு இருந்த மிகவும் ஆதரவான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றுள்ளது. இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

இதன் காரணமாக பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கான சுங்க வரியை 200 சதவீதம் மத்திய அரசு அதிகரித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

200% சுங்க வரி அதிகரிகப்பட்டுள்ளதால் இந்திய இறக்குமதியாளர்கள் பாகிஸ்தானிலிருந்து எந்த பொருட்களையும் இறக்குமதி செய்ய வாய்ப்பே இல்லை. இதனால் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் இதுவரை கிடைத்து வந்த் மிகப்பெரிய வருமானம் பாகிஸ்தானுக்கு இனி கிடைக்காது. ஏற்கனவே பொருளாதாரத்தில் தத்தளித்து வரும் பாகிஸ்தானுக்கு இது முதல் அடிதான் என்றும் இன்னும் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கை காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது

 

Leave a Reply