பாகிஸ்தானுக்கு போயிடுங்க: தமிழக ஐஏஎஸ் அதிகாரியை மிரட்டிய கர்நாடக பா.ஜ.க தலைவர்

தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ’பன்முகத் தன்மைகொண்ட ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகள் சமரசம் செய்துகொள்ளப்படும்போது, அரசு ஊழியராகப் பணி புரிவது தர்மமற்றது. வருங்காலத்தில் ஜனநாயகத்தின் அடிப்படைத் தன்மைகளைச் சிதைக்கும் போக்கு அதிகரிக்கும்’ என தனது ராஜினாமாவிற்கு விளக்கம் அளித்தார்.

சசிகாந்த் செந்தில் அளித்த இந்த விளக்கம் குறித்து கர்நாடக பா.ஜ.க தலைவர் அனந்த குமார் ஹெட்ஜே கூறியதாவது: பெரும்பான்மையின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் எடுத்த முடிவை விமர்சனம் செய்வதை விட பெரிய தேச துரோகச் செயல் எதுவும் இல்லை.

செந்தில் செய்ய வேண்டிய முதல் விஷயம் அவரது நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பவர்களுடன் பாகிஸ்தான் செல்வதுதான். இது மிகவும் எளிதானது மேலும் நிரந்தரமான தீர்வும் கூட. இங்கிருந்து நாட்டை அழிப்பதற்குப் பதிலாக அங்கு போய் நாட்டுக்கு எதிராகவும் அரசாங்கத்திற்கு எதிராகவும் போராட்டத்தை தொடங்கட்டும். அரசு அவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரிடமோ பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களின் சொற்களுக்கு ஏற்ப இசைந்து கொடுக்கிறார்” என்று மிரட்டும் வகையில் கூறியுள்ளார்.

Leave a Reply