shadow

பாகிஸ்தானில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிப்பது ஏன்? சபாநாயகர் விளக்கம்

speakerநாடுகளில் உள்ள நாடாளுமன்றங்களின் சபாநாயகர்கள் பங்கேற்கும், காமன்வெல்த் பார்லிமென்டரி யூனியன் மாநாடு வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் நகரில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு இந்திய மக்களவை சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை சபாநாயகர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், பல வருடங்களாக சர்ச்சைக்குரிய பகுதியாக கருதப்படும் காஷ்மீர் மாநில சபாநாயகருக்கு மட்டும் பாகிஸ்தான் அழைப்பு விடுக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள இந்தியா, காமன்வெல்த் அமைப்பில் உள்ள நாடாளுமன்றங்களின் மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

நேற்று டெல்லியில் அவசர கூடம் ஒன்றை கூட்டிய மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாராஜன் கூறியதாவது:

காஷ்மீர் சட்டசபை சபாநாயகருக்கு அழைப்பு விடுக்காததால், பாகிஸ்தானில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பது என்று சபாநாயகர்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் சபாநாயகருக்கு அழைப்பு விடுக்காவிட்டால், மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்று காமன்வெல்த் பார்லிமென்டரி யூனியன் தலைவருக்கு தகவல் அனுப்பி விட்டோம். இந்த யூனியனில் உள்ள எல்லா சபாநாயகர்களுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும். அந்த விதியை மீறி பாகிஸ்தான் செயல்படுகிறது.

கடந்த 1951-57-ம் ஆண்டு விதிகளை காட்டி காஷ்மீர் சபாநாயகரை அழைக்கவில்லை என்று பாகிஸ்தான் கூறுகிறது. அந்த சட்டம் காலாவதியாகி விட்டது. கடந்த 2007-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் யூனியன் கூட்டத்தில் காஷ்மீர் சபாநாயகர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சுமித்ரா மகாஜன் கூறினார்.

இந்த முடிவுக்கு, நாட்டின் அனைத்து சட்டசபை சபாநாயகர்களும் ஆதரவு கொடுத்ததற்காக காஷ்மீர் சபாநாயகர் ரவீந்திர குப்தா நன்றி தெரிவித்து கொண்டார். அவர் கூறும்போது, ‘இந்த பிரச்சினை இந்திய நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு தொடர்பானது. பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு’என்றார்.

Leave a Reply