shadow

பாகிஸ்தானில் சார்க் மாநாடு: இந்திய பிரதமருக்கு அழைப்பு வருமா?

இந்த ஆண்டு பாகிஸ்தானில் சார்க் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய பிரதமருக்கு அழைப்பு வருமா? அப்படியே வந்தாலும், இந்தியாவின் சார்பில் அந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை சற்றுமுன் உறுதி செய்துள்ளது.

ஆனால் சார்க் மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் மோடிக்குப் பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்ததை இந்தியா நிராகரித்துள்ளது. சார்க் மாநாட்டு அறிவிப்பை அனைத்து உறுப்பு நாடுகளும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு என்றும், பாகிஸ்தான் தானாகவே மாநாட்டைக் கூட்டவும் அழைப்பு விடுக்கவும் முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

உறுப்பு நாடுகளுக்கு முறைப்படி அழைப்பு விடுத்த பின்னரே சார்க் மாநாட்டுக்கான நாளைத் தீர்மானிக்க முடியும் என்றும் இந்திய அதிகாரி தெரிவித்தார்

Leave a Reply