shadow

பாகிஸ்தானிலும் ரிலீஸ் ஆகும் ரஜினியின் ‘2.0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகாவின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ‘2.0’ திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது

இந்த படம் இந்தியாவில் மட்டுமின்றி கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளிலும் வெளியாகவுள்ள நிலையில் பாகிஸ்தானிலும் இந்த படம் வெளியாகவுள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் முன்னணி பத்திரிகை ஒன்றில் இந்த படம் நவம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் என விளம்பரம் செய்யப்பட்டு முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ள அக்சயகுமாரின் படங்கள் ஏற்கனவே பாகிஸ்தானில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி, பாகுபலி 2 போன்ற ஒருசில தென்னிந்திய படங்கள் மட்டுமே பாகிஸ்தானில் இதுவரை ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் தற்போது ‘2.0’ பாகிஸ்தானில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply