shadow

பழைய புடவையை புதிதாக மாற்றுவது எப்படி தெரியுமா?

பெண்கள் தங்கள் முகத்திற்கு மேக்கப் போட்டு பளிச்சென தோன்றுவதுபோல், தங்கள் பழைய புடவைகளுக்கு மேக்கப் போட்டு, புதிய வடிவமைப்போடு அதை உடுத்திக்கொள்ளலாம்.

பெண்கள் தங்கள் முகத்திற்கு மேக்கப் போட்டு பளிச்சென தோன்றுவதுபோல், அவர்கள் தங்கள் பழைய புடவைகளுக்கு மேக்கப் போட்டு, புதிய வடிவமைப்போடு அதை உடுத்திக்கொள்ளலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

* உங்களிடம் இருக்கும் அழகான புடவையை அதிக நாட்கள் உடுத்திவிட்டது போன்ற அலுப்பு ஏற்பட்டால், அந்த பழைய புடவைக்கு புதிய ‘லுக்’ கொடுக்கலாம். புடவையின் ஓரத்தில் இருக்கும் டிசைனை அப்படியே வெட்டி எடுத்துவிட்டு, பதிலாக புடவையின் உள்ளே இருக்கும் கலருக்கு பொருத்தமான நெட் பாப்ரிக் ஒன்றை தேர்ந்தெடுத்து இணைத்து விடுங்கள். அந்த புதிய டிசைனுக்கு ஏற்ப ஜாக்கெட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

* உங்களிடம் பழைய பிளைன் புடவைகள் இருந்தால், அதில் உங்களுக்கு பிடித்தமான புதிய டிசைனை உருவாக்கலாம். அது ராஜபுத்ர பிரிண்டாகவோ, ஸ்கிரீன் பிரிண்டாகவோ இருக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் டிசைன் அழகாக இருந்தால், உங்கள் புடவைக்கு புதுமையான தோற்றம் கிடைத்து விடும்.

* விலை உயர்ந்த பழைய காஞ்சீபுரம் பட்டு இருந்தால் அதன் பார்டர் மற்றும் முந்தானையை வெட்டி எடுத்துவிட்டு அதன் கலருக்கு பொருத்தமான வெல்வெட் துணியை இணைத்தால், மீண்டும் சில வருடங்கள் புதுமையாக அதனை உடுத்தலாம்.

* கலம்காரி டிசைனுக்கு இப்போது மவுசு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பழைய காஞ்சீபுரம் பட்டில் பார்டரில் அமைந்திருக்கும் ஜரிகை பொலிவிழந்தோ, சிதைந்தோ போயிருந்தால் அதையும், முந்தானையையும் வெட்டி நீக்கிவிடுங்கள். ரா சில்க்கில் கலம்காரி டிசைன் செய்து பார்டருக்கு இணையுங்கள். காட்டன் அல்லது சில்க் கலம்காரியை இதற்காக தேர்ந்தெடுக்கலாம்.

* ஆடை கண்காட்சி களுக்கு அடிக்கடி செல்லுங்கள். அங்கு உங்களை கவர்ந்த டிசைன்களை காணமுடியும். டிசைனர்கள் ஆடைகளில் இணைக்கும் மணிகள் போன்ற பொருட்களை வாங்கும் கடைகளுக்கும் செல்லுங்கள். அந்த இணைப்பு பொருட்களை வாங்கி, உங்கள் பழைய புடவையில் உங்களை கவர்ந்த புதிய டிசைன்களை உருவாக்குங்கள். அது உங்கள் உடைகளுக்கு அழகான புதிய தோற்றத்தை தரும். பாராட்டையும் பெற்றுத் தரும்.

Leave a Reply