shadow

பள்ளிக்கல்வித்துறைக்கு தனி சேனல்: அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்தே அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அவருடைய நடவடிக்கைகளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறைக்கு தனி சேனல் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்த தனி சேனலில் பள்ளிக்கல்வித்துறையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்றும்,
ஸ்டூடியோ உருவாக்கப்பட்டு சிறந்த கல்வியாளர்களை கொண்டு கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு மாணவ, மாணவிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.

Leave a Reply