பயணிகளின் விருப்பத்தை பொறுத்தே காப்பீடு: செப் 1 முதல் ஐ.ஆர்.சி.டி.சி. முன்பதிவில் மாற்றம்

வரும் செப்டம்பர் 1 முதல் ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணிகள் விரும்பினால் மட்டுமே காப்பீடு (செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் பயணம் செய்யும்போது எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளில் சிக்கி இறப்பவர்களுக்கும், படுகாயமடைபவர்களுக்கும் உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படுவதற்காக முன்பதிவு செய்யும்போது காப்பீடு செய்யும் வசதி உள்ளது. இதற்காக ரெயில்வே நிர்வாகம் பயணிகளிடம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ரூ.1 மட்டும் காப்பீடு தொகையாக வசூலித்து வருகிறது.

இந்த நிலையில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் இணையதளம் மூலம் இ-டிக்கெட்டுகள் பெறுபவர்களுக்கு அவர்களது விருப்பத்தின் பேரிலேயே காப்பீடு செய்யப்பட உள்ளது. இதற்காக காப்பீடு வேண்டுமா? வேண்டாமா? என்று ஒரு பகுதி இடம்பெற்றிருக்கும். அதில் பயணிகள் தங்கள் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். காப்பீடு செய்தவர்கள் விபத்து ஏற்படும் பட்சத்தில் இறக்க நேரிட்டால் ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தால் ரூ.7.50 லட்சமும் இழப்பீடு தொகையாக வழங்கப்படும்.

Leave a Reply