பயங்கரமாக பரவும் நிபா வைரஸ்: மத்திய அரசு அவசர ஆலோசனை

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பயங்கரமாக பரவ தொடங்கியதை தொடர்ந்து மத்திய அரசு அவசர ஆலோசனை செய்து வருகிறது.
டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனையில் நிபா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக நிபா வைரஸ் நோயை தடுக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் கேரள அரசுக்கு செய்யும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் கேரளா அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வருவதாகவும், நிபா வைரஸ் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், பொதுமக்களுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply