shadow

பத்ம பூஷன் விருதை திரும்ப ஒப்படைத்துவிடுவேன்: அன்னா ஹசாரே எச்சரிக்கை

ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட ஒருசில கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடந்த 30-ம் தேதியிலிருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஆனால் இவருடைய உண்ணாவிரதத்தை ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் கண்டுகொள்ளவில்லாஇ

இந்த நிலையில் லோக்பால், லோக் ஆயுக்தா ஆகிய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் தனக்கு அளிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை திரும்ப ஒப்படைத்துவிடுவேன் என்று அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார். அன்னா ஹசாரேவிற்கு கடந்த 1992-ஆம் ஆண்டு பதம் பூஷன் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர் உண்ணாவிரதம் காரணமாக உடல்நலக்குறைவு அவருக்கு ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் தனக்கு ஏதாவது நேர்ந்தால அதற்கு பிரதமர் மோடி தான் பொறுப்பு என்று அன்னா ஹசாரே ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply