shadow

பத்து மாதங்களுக்கு மட்டுமே பாகிஸ்தான் பிரதமர். நவாஸ் ஷெரீப் அதிரடி முடிவு

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக ஷாகித் கான் அப்பாசி அடுத்த 10 மாதங்களுக்கு மட்டுமே நீட்டிப்பார் என்று ஆளுங்கட்சி தலைவரும், சமீபத்தில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவருமான நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

இதுகுறித்து கட்சி கூட்டம் ஒன்றில் கூறிய நவாஸ் ஷெரீப், ‘பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் முதல்-மந்திரி பதவியில் இருந்து ‘‌ஷெஹ்பாஸ் ஷெரீப்பை நீக்கி விட்டு அனுபவம் இல்லாதவரை அப்பதவியில் அமர்த்துவது சரியாக இருக்காது.

ஏனெனில் பஞ்சாப் மாகாணம் நமது கட்சிக்கு சாதகமான பகுதி அங்கிருந்துதான் அதிக எம்.பி.க்கள் வெற்றி பெற முடியும். எனவே ஷெஹ்பாஸ் ஷெரீப் பிரதமராவதை விட பஞ்சாப் முதல்- மந்திரியாக நீடிப்பதே சிறந்தது என்று கூறியுள்ளார். மேலும் பத்து மாதங்களில் நவாஸ் மீண்டும் பிரதமர் ஆவது உறுதி என்று அவரது கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply