shadow

பத்திரிக்கையாளர்களுக்கு நாட்டுப்பற்றே கிடையாது: அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்றதில் இருந்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வந்த நிலையில் தற்போது பத்திரிகையாளர்கள் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் அமெரிக்க பத்திரிக்கையாளர்களுக்கு நாட்டுப்பற்று கொஞ்சம் கூட கிடையாது என கூறி கடுமையாக விமர்சனம் செய்துள்ளதால் பத்திரிகையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: தமது நிர்வாகம் குறித்து வெளியாகும் 90 சதவீத செய்திகள் எதிர்மறையாகவே இருக்கின்றது. ஊடகங்கள் மீதான நம்பிக்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்து விட்டது. இறக்கும் தருவாயில் உள்ள செய்தித் துறைக்காக, நாட்டுக்காக போராடுவதை தாம் நிறுத்தப் போவதில்லை என்று கூறியுள்ளார். டிரம்பின் இந்த கருத்துக்கு பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

//twitter.com/realDonaldTrump/status/1023646665851449345

//twitter.com/realDonaldTrump/status/1023646663590797312

Leave a Reply