shadow

பணம் போலவே ஏடிஎம்-இல் இருந்து மருந்து மாத்திரைகள்

தமிழகத்தில் பணம் எடுப்பதுபோல, மருந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரங்களை அரசு மருத்துவமனையில் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏடிஎம்-ல் பணம் எடுப்பதுபோல், பணத்தை செலுத்தினால் மருந்துகளை கொடுக்கும் இயந்திரங்களை அமைக்க முயற்சி எடுத்து வருவதாக சுதாரத்துறை செயலாளர்டாக்டர் ராதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில் ’இந்த இயந்திரமானது நோயாளிகளின் மருந்து சீட்டில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை நினைவில் வைத்துக்கொள்ளும். மருந்து சீட்டில் கொடுக்கப்பட்டுள்ள மருந்தை அப்படியே நோயாளிகளுக்கு கொடுக்கும். மேலும் ஒரு மாதத்திற்கு மட்டும் மருந்து கொடுக்கப்பட்டு மீண்டும் மருத்துவர்களிடத்தில் செல்ல வேண்டும் என்ற குறிப்புகள் இருந்தால், அந்த கால அளவுக்கு மட்டுமே மருந்தை கொடுக்கும். அதிகமாக மருந்துகள் பதிவு செய்தாலும், ஏந்திரம் அந்த மருந்தை வழங்காது.

மேலும் சர்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் எடுத்துக்கொள்ளும் சிகிச்சை தொடர்பான விவரங்களை இந்த இயந்திரம் மூலம் பெற முடியும். மேலும் இது மருந்து சீட்டை இரு முறை ஸ்கேன் செய்யும் என்பதால் தவறான மருந்தை கொடுக்க வாய்பில்லை என்று கூறியுள்ளார்.

Leave a Reply