shadow

பணக்கார தொழில்நிறுவனங்களின் பட்டியல். HCL ஷிவ்நாடார் 2வது இடம்
shiv nadar
பிரபல அமெரிக்க ஊடகமான ஃபோர்ப்ஸ்’ நிறுவனம் இந்த ஆண்டிற்கான இந்திய அளவில்  பணக்கார தொழில் நுட்ப நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த HCL நிறுவனத்தின் உரிமையாளரான ஷிவ் நாடார் 2வது இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளார். இவர் கடந்த வருடமும் இரண்டாவது இடத்தில்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது நிறுவனத்தின் மொத்த  சொத்து மதிப்பு 12.9 பில்லியனாக தற்போது உயர்ந்துள்ளதாகவும், கடந்த ஆண்டு இவரது சொத்து மதிப்பு 12.5 பில்லியனாக இருந்த. தூத்தூக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள மூளைப்பொழி என்ற சிறிய  கிராமத்தில் பிறந்த ஷிவ் நாடார், 1970களில் HCL நிறுவனத்தை தொடங்கி அதனை ஒரு சாம்ராஜ்யமாக மாற்றி காட்டியுள்ளார்.

ஃபோர்ப்ஸ் பட்டியலில் உள்ள நிறுவனங்களின் பட்டியல்

1. விப்ரோ நிறுவனர் ஆஷிம் பிரேம்ஜி        சொத்து மதிப்பு 15.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
2. HCL நிறுவனர் ஷிவ் நாடார்            சொத்து மதிப்பு 12.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
3. ஏர்டெல் அதிபர் சுனில் மித்தல்        சொத்து மதிப்பு 7.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
4. இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி     சொத்து மதிப்பு 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
5. வீடியோகான் அதிபர் வேணுகோபால்        சொத்து மதிப்பு 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
6. இன்போசிஸ் நிறுவனர் எஸ். கோபலகிருஷ்ணன் சொத்து மதிப்பு 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்
7. இன்போசிஸ் நிறுவனர் நந்தன் நீல்கேனி     சொத்துமதிப்பு  1.6 பில்லியன் அமெரிக்க டாலர்
8.  பிலிப்கார்ட் பின்னி பன்சால்         சொத்து மதிப்பு 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
9. பிலிப்கார்ட் சச்சின் பன்சால்            சொத்து மதிப்பு 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
10. இன்போசிஸ் நிறுவனர் கே.தினேஷ்        சொத்து மதிப்பு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

Leave a Reply