shadow

பச்சை மொச்சைக்காய் ரசம்தேவையானவை: உரித்த பச்சை மொச்சைக்காய் – 100 கிராம், துவரம்பருப்பு – 3 டேபிள் ஸ்பூன், தக்காளி – ஒன்று, காய்ந்த மிளகாய் – 3, மல்லி (தனியா) – ஒரு டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன் (வறுப்பதற்கு), கொப்பரைத் துருவல் – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், பெருங்காயம், மஞ்சள்தூள் – சிறிதளவு, புளி – நெல்லிக்காய் அளவு, எண்ணெய் – 3 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மொச்சைக்காயை வேகவைக்கவும். 3 டேபிள்ஸ்பூன் துவரம்பருப்பை வேகவைத்து மசித்துக்கொள்ளவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெயைக் காயவிட்டு… மல்லி, காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் துவரம்பருப்பு, மிளகு, வெந்தயம், பெருங்காயம், கொப்பரைத் துருவல் ஆகியவற்றை சேர்த்து வறுத்து அரைத்துக்கொள்ளவும். புளியை 3 டம்ளர் தண்ணீரில் கரைத்து எடுத்து உப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய தக்காளி சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, அரைத்து வைத்த விழுது, வேகவைத்த மொச்சைக்காய், துவரம்பருப்பு மூன்றையும் சேர்த்து பொங்கி வரும் சமயம் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

Leave a Reply