shadow

பங்கஜ முத்திரை என்றால் என்ன?

1.2
நம் மனம் மலர் போன்று மென்மையாக, தன்னலமற்று, மலர்ச்சியாக இருந்தாலே போதும்; ஞானம் தானாகவே ஊற்றெடுக்கும். இந்த உலகையே பூலோகம் என்றுதான் அழைக் கிறோம். இப்பூலோகமானது தாமரை போல மெள்ள மெள்ள விரிந்து மலர்ந்து உண்டானதாக பத்ம புராணம் கூறுகின்றது.

படைப்புக் கடவுள் பிரம்மன், மகாவிஷ்ணு வின் நாபிக்கமலத்தில் (தாமரையில்)அமர்ந்திருக்கிறார். இதனை உணர்த்தவே தாமரைக்கு பங்கஜம் என்றும் பத்மம் என்று பெயர்கள் வந்தன. ஆன்மா, நம் உடலில் பங்கஜ வடிவில் இருப்பதாக வேதங்கள் கூறுகின்றன. இந்த பங்கஜம் போன்று மனதை மலரச்செய்வது பங்கஜ முத்திரை.

எப்படிச் செய்வது?: சப்பணம் இட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்துகொள்ள வேண்டும். பிறகு, நெஞ்சுக் குழிக்கு நேராக (அனாகத சக்கரத்துக்கு நேராக), கைவிரல்கள் உடலில் ஒட்டாத வண்ணம், ஒரு தாமரை மலர்ந்திருப்பதுபோன்று… அதாவது, இரண்டு கரங்களின் கட்டைவிரல்களும், சுண்டு விரல்களும் முழுமையாக ஒட்டியிருக்க, மற்ற விரல்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மலர்ச்சியாக விரித்துவைத்துக் கொள்ள வேண்டும் (படத்தைப் பார்க்கவும்).

இனி, கண்களை மூடி 30 நிமிடங்கள் வரையிலும் மெளனமாக அமர்ந்திருக்கலாம். மன இறுக்கம் உள்ளவர்கள், தாமரை மொட்டு மெள்ள இதழ் விரிப்பது போன்று, முதலில் கைகளைக் குவித்து வைத்து, பின்னர் மெது மெதுவாக விரல்களை விரிக்கவும். இவ்வாறு விரிக்க குறைந்தது 3 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம்.இப்படி, பதினான்கு தடவைகள் செய்யவும். தினமும் அதிகாலை வேளையில் செய்து பயனடையலாம்.

பலன்கள்: சேற்றில் மலர்ந்தாலும் தூய்மை யாகவும் அழகுடனும் திகழும் தாமரை. அது நீரில் மிதந்தாலும் அதன் இதழ்களில் தண் ணீர் ஒட்டாது. பங்கஜ முத்திரையும் நம் மனதை மலரச் செய்யும். நாம் உலக போகங்களில் உழன்றாலும் ஒட்டியும் ஒட்டாமல் வாழும் வல்லமையைத் தரும். இதுவே ஞானத்தின் முதல் நிலை.

** மனச் சலனம், வீண் கோபம், பதற்றம் ஆகியன நீங்கும். முகப் பொலிவும் தேகத்தில் தேஜஸும் ஏற்படும்.

** தாமரையானது வெளியே குளிர்ச்சியையும் உள்ளே சிறு வெப்பத்தையும் தக்க வைத்திருக்கும் ஒர் அற்புத மலர். அதுபோல உடலைக் குளிர்ச்சியாக்கி, மனதில் தேவையான வெம்மையை தக்கவைத்து, ஆரோக்கியத்தைச் செம்மையாக்கும்.

** மனம் தெளிவடைவதால் சிந்தனையும் வளமாகும், செயல்கள் சிறப்படையும். பிள்ளைகளுக்கு ஞாபக சக்தி வளரும், கல்வியில் மேன்மை பெறுவார்கள்.

Leave a Reply