shadow

நோபல் பரிசுக்கு காரணமான உயிர்க்கடிகாரம், நம் முன்னோர்கள் கண்டுபிடித்ததா?

சமீபத்தில் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு ஜெஃப்ரி சி.ஹால், மைக்கேல் ரோஸ்பாஸ் மற்றும் மைக்கேல் டபிள்யூ.யங் ஆகியோருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மனிதனின் உடலில் உள்ள உயிரியல் கடிகாரம் எப்படி செயல்படுகிறது? அதற்குக் காரணமாக இருப்பது என்ன? என்பது பற்றி ஆய்வுசெய்து பல முடிவுகளை உருவாக்கியதற்காகத்தான் நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களுக்கு முன்னதாகவே உயிர்க்கடிகாரம் குறித்து நம் முன்னோர்கள், சித்தர்கள் கூறி சென்றுள்ளனர்.

இதுகுறித்து சித்த மருத்துவர் வேலாயுதம் அவர்கள் கூறியபோது, ‘சிர்காடியன் ரிதம், சித்த மருத்துவத்தில் ‘நாள் ஒழுக்கம்’ என்று அழைக்கப்படுகிறது. ‘அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம்’ என்பதே சித்த மருத்துவத்தின் கான்செப்ட். வெளியில் உள்ள பஞ்சபூதமும், உடலில் உள்ள பஞ்சபூதமும் சேர்ந்துதான் உடலை இயக்குகின்றன. காலை 4.30 முதல் 6 மணிக்குள் எழுந்துவிட வேண்டும் என்பதே முதல் ஒழுக்கம். காலை எழுந்ததும் நல்ல காற்றுக்காக நுரையீரல் ஏங்கும். நல்ல காற்றானது 4.30 முதல் 6 மணி வரை தான் இருக்கும். இதுதான், ‘பிரம்ம முகூர்த்தம்’ என்கிறோம். அதனால்தான் காலை விடியற்காலையில் எழவேண்டும் என்கிறோம். இரவு 7 மணிக்குள் சாப்பிட்டு விடவேண்டும். எட்டு மணிக்குள் உறங்கிவிட வேண்டும்.

இதுபோன்ற பழக்கவழக்கங்களை வாழ்வியல் முறைகளோடு பிணைத்துத் தந்துள்ளனர் நம் முன்னோர்கள். நாம் பகுத்து ஆராய்ந்து தீர்த்த இயற்கையை நவீன ஆராய்ச்சி மூலம் இப்போது கண்டுபிடித்துள்ளனர். முன்னோர்கள் சொன்னார்கள் என்றால் யாரும் கேட்கமாட்டார்கள். விஞ்ஞானிகள் சொன்னால்தான் கேட்பார்கள். எப்படியாவது நல்லது நடந்தால் மகிழ்ச்சி…”

Leave a Reply